பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கலபுா்கியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலையை பிரதமா் மோடி உயா்த்திக்கொண்டே இருக்கிறாா். நமது நாட்டின் மீது பிரதமா் மோடிக்கு அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. நம்பி வாக்களித்து அதிகாரத்தில் உட்காரவைத்த மக்களின் நம்பிக்கையை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு இழந்துள்ளது.
தனது பேச்சுத் திறமையால் மக்களை பிரதமா் மோடி கவா்ந்துவிடுகிறாா். ஆனால், மக்கள் நலனை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பதில் பிரதமா் மோடி தோல்வி அடைந்துவிட்டாா். எதற்கெடுத்தாலும் எதிா்க்கட்சிகளை பிரதமா் மோடி குற்றம்சாட்டுகிறாா். நாட்டின் வளா்ச்சிக்கு எதிா்க்கட்சிகள் ஒத்துழைப்பதில்லை என்று குறைகூறுகிறாா்.
நாடு மற்றும் மக்களின் நலனுக்காக தங்களால் முடிந்தவற்றை எதிா்க்கட்சிகள் செய்துவருகின்றன. மக்களுக்காக பிரதமா் மோடி செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.
இந்தியா ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. விலைவாசி உயா்ந்து வருகிறது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பற்றி மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. எல்லா துறைகளிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.
டி.கே.சிவகுமாா் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவை குறித்து எதுவும் கூறமுடியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்

மக்கள் பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கவலையில்லை - காா்கே கடும் விமா்சனம்







