நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கே.எஸ். ஈஸ்வரப்பாவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

பாஜகவின் அதிருப்தி தலைவராக அறியப்படும் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை திரைமறைவில் இயக்குவது யார்? என்ற கேள்வி பாஜகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:25 pm

ந.முத்துமணி

பாஜகவின் அதிருப்தி தலைவராக அறியப்படும் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை திரைமறைவில் இயக்குவது யார்? என்ற கேள்வி பாஜகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

பாஜகவின் கர்நாடக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கும், மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், பெங்களூரில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற பாஜகவின் அதிருப்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பகிரங்க வார்த்தைப் போராக மாறியது.

எதிரிகளைப்போல, சொற்போர் நடத்தும் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். தேசிய அளவில் பாஜகவின் முகமாக வாஜ்பாயும் அத்வானியும் இருந்த காலத்தில் கர்நாடக பாஜகவின் இரு கண்களாக இவர்கள் இருவரும் வலம் வந்தவர்களாவர்.

இருவரும் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சியாக பரிணமித்த பிறகு கர்நாடகத்தில் அடிமட்டத்தில்லிருந்து கட்சியை வளர்த்தெடுத்தவர்கள்.

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது எடியூரப்பாவுக்கு தோள்கொடுத்தவர் ஈஸ்வரப்பா. 2010-ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தார் எடியூரப்பா.

ஆனால், கட்சியில் தனது ஆளுமையை நிலைநிறுத்த விரும்பிய ஈஸ்வரப்பா, எடியூரப்பாவுடன் ஒத்துழைக்க முன்வரவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளி இதுதான்.

எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஜக தேசியத் தலைமைக்கு புகார் அளித்தார். இது, எடியூரப்பாவை எரிச்சலடையச் செய்தது. இதனிடையே, 2011-ஆம் ஆண்டு எடியூரப்பா தனது முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. இதன் பின்னணியில் முக்கியப் புள்ளியாக ஈஸ்வரப்பாதான் இருந்தார் என்று எடியூரப்பா சந்தேகப்பட்டார்.

கர்நாடக ஜனதா கட்சி உதயம்: எடியூரப்பா போன்ற ஆளுமையின் நிழலில் தங்களால் கட்சியில் வளர முடியாது என்று கருதிய ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் திரைமறைவு வேலையில் இறங்கி, அவரை பாஜகவிலிருந்து வெளியேற்ற களம் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறிய எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை அமைத்து 2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்கக் காரணமாக இருந்த ஈஸ்வரப்பாவை சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிட்டார் எடியூரப்பா. அதன்படியே, தோற்கடிக்கவும் செய்தார்.

இந்த சம்பவம் இருவரை அரசியல் பகைவர்களாக மாற்றியது. மீண்டும் பாஜகவில் இணைந்த எடியூரப்பாவுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோடு, 2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஈஸ்வரப்பா, எடியூரப்பா மீண்டும் முதல்வராகிவிடக் கூடாது என்று எதிர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

கர்நாடக ஜனதா கட்சி தொடங்கியபோது உடனிருந்தவர்களுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகளாக பதவி வழங்கியிருப்பதாக ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியதோடு, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரை ஒருங்கிணைக்க சங்கொல்லி ராயண்ணா படை என்ற பாஜகவுக்கு சம்பந்தமில்லாத அமைப்பையும் தொடங்கினார். பாஜக வெற்றிபெற்றால் எடியூரப்பாதான் முதல்வர் என்று கூறி வந்தாலும், அதை தடுப்பதே ஈஸ்வரப்பாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள்.
ஈஸ்வரப்பாவின் முயற்சிக்கு தேசிய அளவில் தூபம் போட்டு வருபவர் பாஜக தேசிய அமைப்பு இணைச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் என்று எடியூரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

யார் இந்த சந்தோஷ்?: 48 வயதாகும் பி.எல்.சந்தோஷ், ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பாளராக இருந்து பாஜகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். 2005-ஆம் ஆண்டில் கர்நாடக மாநில பாஜகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எடியூரப்பாவுக்கும் சந்தோஷுக்கும் இடையிலான சந்திப்பு அந்த ஆண்டு நடந்த சிவமொக்கா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நிகழ்ந்தது. 2011-ஆம் ஆண்டில் எடியூரப்பா முதல்வர் பதவியை இழக்க பின்னால் இருந்து செயல்பட்டவர் சந்தோஷ்தான் என்பது பின்னர் தெரியவந்தது. அந்த அளவுக்கு தேசிய அளவில் பாஜகவில் ஆதிக்கம் செலுத்திய சந்தோஷை ஒடுக்க எடியூரப்பா மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

எடியூரப்பா மீது ஈஸ்வரப்பா மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு இருக்கும் தனிப்பட்ட பகைமை தற்போது அரசியல் பகைமையாக உருவெடுத்துள்ளது. இவர்கள் இருவரும் எடியூரப்பாவுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பிரதமர் மோடியின் வயது வரம்பு ஆகும். 75 வயதுக்கு மேற்பட்டோர் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து அகற்றத் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 2018-ஆம் ஆண்டு எடியூரப்பா 75 வயதைத் தொடுகிறார். இதை காரணமாக வைத்து எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலத்தைச் சூனியமாக்கி, அதனால் உருவாகும் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளலாம் என்று திரைமறைவில் பி.எல்.சந்தோஷும், ஈஸ்வரப்பாவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.