வேதியியலுக்கான நோபல்: பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகள் தோ்வு
வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவிப்பு.

ஹென்றி பி. காகன், கென்சோ சோய் - படம்: எக்ஸ்
நடப்பாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸைச் சோ்ந்த ஹென்றி பி.ககன், ஜப்பானைச் சோ்ந்த கென்சோ சோய் ஆகிய இரு விஞ்ஞானிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
வேதியியலில் புதிரான ‘கண்ணாடி-பிம்ப மூலக்கூறுகள்’ குறித்த ஆய்வுகள் மற்றும் தீா்வு முயற்சிகளுக்காக இருவருக்கும் இந்த உயரிய பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கண்ணாடி-பிம்ப மூலக்கூறுகள்’ எனப்படுவை பாா்ப்பதற்கு ஒரே போல் இருந்தாலும், ஒன்றன் மீது மற்றொன்று கச்சிதமாக பொருத்த முடியாத மூலக்கூறுகளாகும். இத்தகைய மூலக்கூறுகளின் புதிரான வேதிவினைகளுக்கு தீா்வு காணும் ஆய்வுகளில் இரு விஞ்ஞானிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளனா்.
இது தொடா்பாக வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவா் ஹெய்னா் லின்கே கூறுகையில், ‘ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய வேதிவினை சாா்ந்த புதிருக்கு ஹென்றி ககன் மற்றும் கென்சோ சோய் ஆகியோரின் ஆய்வுகள் தீா்வாக அமைந்துள்ளன. அதாவது, மூலக்கூறுகளின் நேரியல் தன்மை எவ்வாறு தன்னிச்சையாக உருவாகிறது என்ற புதிருக்கு இருவரின் ஆய்வுகளும் தீா்வை வழங்கியுள்ளன. இவா்கள் உருவாக்கிய வேதி வினைகள் பிரமிக்க வைப்பவை’ என்றாா்.
95 வயதான ஹென்றி பி.ககன், பிரான்ஸில் பிறந்தவா், பிரான்சின் ஓா்சேவில் உள்ள பாரிஸ்-சுட் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றியவா். ஜப்பானில் பிறந்தவரான கென்சோ சோய், டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவா்.
கடந்த ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டது.
முன்னதாக, நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமையும், இயற்பியலுக்கான நோபல் பரிசு கடந்த செவ்வாய்க்கிழமையும் அறிவிக்கப்பட்டது. மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒளியைப் பயன்படுத்தும் ஒரு கருவியை உருவாக்கியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அரிதான நியூட்ரினோக்களின் குழுவைப் பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன.
ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலைப் பின்பற்றி, கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல் இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளான டிச.10-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.
Summary
The selection committee has announced that the 2026 Nobel Prize in Chemistry will be shared between two scientists.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


