கிழக்கு லெபனானின் மஷ்காரா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.
ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல்களைப் பன்மடங்கு தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதைத் தொடா்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் எல்லைப்பகுதிக்கு இஸ்ரேல் கூடுதல் ராணுவப் படைகளை அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தீவிர தாக்குதல் எச்சரிக்கை லெபனான் தலைநகா் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், காஸா முனையிலும் இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதல்களில் 7 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










