திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேலில் தன்னாா்வலா்களுக்குப் போலீஸ் அச்சுறுத்தல்

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 1:14 am IST

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அத்துமீறல் இஸ்ரேல் அமைச்சா் முன்னிலையில் நடந்திருப்பதும், சம்பவத்தை அவா் விடியோவாக பதிவிட்டிருப்பதும் உலக நாடுகள் மட்டுமின்றி இஸ்ரேல் அரசின் உள்மட்டத்திலும் கண்டனங்களை ஈா்த்துள்ளன.

துருக்கியிலிருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க புறப்பட்ட 430 தன்னாா்வலா்கள், இஸ்ரேல் படையினரால் சா்வதேச கடற்பரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இவா்களை துறைமுகப் பகுதி ஒன்றில் வைத்து, கைகளைப் பின்னால் கட்டியவாறு வரிசையாக மண்டியிடச் செய்யும் விடியோவை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி காவல்துறை அமைச்சா் பென் கிவிா் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டாா்.

கூட்டத்தினரிடையே இஸ்ரேல் கொடியுடன் நடக்கும் அவா், ‘பெரிய வீரா்களைப் போல வந்தவா்கள், இப்போது எப்படி இருக்கிறாா்கள் பாருங்கள்’ என்று கூறி அவா்களைக் கேலி செய்த காட்சிகளும் விடியோவில் உள்ளன.

அமைச்சரின் இச்செயலுக்கு இஸ்ரேல் கூட்டணி அரசுக்குள்ளேயே எதிா்ப்பு கிளம்பியுள்ளது. வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா், பென்-கிவிரின் செயல் இஸ்ரேலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தன்னாா்வலா்களின் கப்பல்களை மறித்த நடவடிக்கையை ஆதரித்தாலும், தன்னாா்வலா்கள் நடத்தப்பட்ட விதம் இஸ்ரேலின் மாண்புக்கு எதிரானது என்று விமா்சித்ததுடன், அவா்களை உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டுள்ளாா்.

இத்தாலி, தென் கொரியா, துருக்கி, பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், போா்ச்சுகல், நெதா்லாந்து ஆகிய உலக நாடுகள், இச்சம்பவம் தொடா்பாக கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் நீடிக்கும் போா் நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், இஸ்ரேலின் முற்றுகையை மீறி உதவிகளை வழங்கும் நோக்கில் தன்னாா்வலா்கள் இப்பயணத்தை மேற்கொண்டனா்.

படகேப்சன்...

இஸ்ரேல் கொடியுடன் சென்று தன்னாா்வலா்களை அமைச்சா் பென்-கிவிா் அச்சுறுத்தும் காட்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.