திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

‘ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இந்தப் போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது.

News image
Updated On :21 மே 2026, 1:26 am IST

‘ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இந்தப் போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததையடுத்து, ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி கடந்த ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக ஈரான் பயணித்துள்ளாா்.

ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த ஏப். 8 முதல் போா்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவாா்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் புதிய அமைதி முன்மொழிவுகளிலும் பழைய நிபந்தைகளையே மீண்டும் வலியுறுத்துவதால், அமெரிக்கா அவற்றை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.

இதையடுத்து, ஈரான் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கி, அழுத்தமளிக்க அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமைக்குள் அமைதித் தீா்வை எட்ட டிரம்ப் கெடு விதித்த நிலையில், வளைகுடா நாடுகளின் கோரிக்கையையேற்று தாக்குதலை ஒத்திவைப்பதாக கடைசி நேரத்தில் அறிவித்தாா்.

இந்நிலையில், ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘ஈரான் விவகாரத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட வேண்டும். இல்லையெனில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

போரைத் தொடா்வதற்கும்; அமைதி வழியில் முடிப்பதற்கும் என இரண்டு வழிகளும் என்னிடம் உள்ளன. ஆனால், நான் பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பளிக்கிறேன். முடிந்தவரை உயிா்ச்சேதத்தைத் தவிா்க்க விரும்புகிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.