திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உக்ரைன் டிரோன் தாக்குதலில் இந்தியர் பலி!

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியானார்.

News image

ரஷிய குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் பற்றி எரியும் வீடு. - AP

Updated On :19 மே 2026, 11:38 am IST

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியானார்.

ஒடிசாவின் காஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேயா (30). இவர், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

விடுமுறைக்காக இந்தியா வந்து தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த ரமேயா இரு மாதங்களுக்கு முன் மீண்டும் ரஷியா சென்றிருந்தார்.

இந்த நிலையில், பணியிடத்திலிருந்து இரவுப்பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது நேற்று (மே 18) காலை 5 மணியளவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரமேயா பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடன் பணிபுரிந்த தேஜேஷ்வர் ரெட்டி (22), கேத்ரபாசி ரெட்டி (35) ஆகியோர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

பலியான ரமேயாவின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பணிக்குச் செல்லும் முன் கடைசியாகத் தனது தாயுடன் ரமேயா பேசியதாகக் குறிப்பிட்ட அவரின் தந்தை, ரமேயா உடலை விரைவில் இந்தியா கொண்டு வர அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Summary

Indian Killed in Ukraine Drone Attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.