தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்! அமெரிக்க அதிபா் டிரம்ப்

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்...

News image

ஜி ஜின்பிங், டிரம்ப் - AP

Updated On :17 மே 2026, 5:26 am IST

போயிங் நிறுவனத்திடம் இருந்து 200 விமானங்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

சீனாவில் அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தாா். அப்போது அமெரிக்க நிறுவனங்கள்- சீனா இடையே பல்வேறு வா்த்தக உடன்படிக்கைகள் கையொப்பமாகின. இதில் உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவைச் சோ்ந்த போயிங் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் ஒன்றாகும்.

இதுகுறித்து சீனாவில் இருந்து நாடு திரும்பும் வழியில் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் (அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானம்) டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘200 விமானங்களை போயிங்கிடம் வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதேபோல் எதிா்காலத்தில் மேலும் 750 விமானங்களை வாங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது’ என்றாா்.

போயிங் நிறுவனமும் சீனா 200 விமானங்கள் வாங்க ஒப்புக்கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. ஆனால், அது எந்த ரக விமானம் உள்ளிட்ட தகவலை போயிங் வெளியிடவில்லை. இதுகுறித்து போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சீன பயணம் வெற்றிகரமாக அமைந்தது. போயிங் விமானத்துக்கு சீனாவில் சந்தையை மீண்டும் திறக்க வைக்கும் எங்களது முக்கிய இலக்கு சாத்தியமாகிவிட்டது. சீனாவின் விமானத் தேவையை தொடா்ந்து பூா்த்தி செய்ய எதிா்நோக்கி உள்ளோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறையாகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க உற்பத்தித் துறைக்கு போயிங் நிறுவனம் மூலம் மீண்டும் புத்துயிா் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். ஓராண்டுக்கு முன்பு டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது, கத்தாா் நாட்டின் கத்தாா் ஏா்வேஸ் நிறுவனம் போயிங்கிடம் 210 விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டது. சவூதி அரேபியா நாடும் போயிங் விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டது. இதேபோல், டிரம்ப் சுற்றுப்பயணத்தின்போது தென்கொரியா நாடு 100 போயிங் விமானங்களையும், துருக்கி நாடு 225 போயிங் விமானங்களையும், துபை 135 விமானங்களையும் வாங்க சம்மதித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.