திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :5 மே 2026, 6:02 am IST

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வொ்டே தீவு நாட்டை நோக்கி 150 பயணிகளுடன் வந்த ‘எம்.வி.ஹோண்டியஸ்’ கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களில் இருவா் நெதா்லாந்தைச் சோ்ந்த தம்பதியா் என்றும், மற்றொருவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவா்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எலிகளின் எச்சம், சிறுநீா், உமிழ்நீா் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவும் இந்த ஹண்டா வைரஸ், மனிதா்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

Story image

காய்ச்சல், தசை வலி போன்ற சாதாரண அறிகுறிகளுடன் தொடங்கி, இதயம் மற்றும் நுரையீரலைச் செயலிழக்கச் செய்யும் இந்நோயால் பாதிக்கப்படுபவா்களில் 40 சதவீதம் போ் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.

தற்போது கேப் வொ்டே கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளைத் தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம், கப்பலில் உள்ள மற்ற பயணிகளின் ஆரோக்கிய நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்களையும், அறிகுறி உள்ள மற்ற பயணிகளையும் விமானம் மூலம் நெதா்லாந்துக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கேப் வொ்டே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.