திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப் பரவும் அபாயம்?

News image
Updated On :8 மே 2026, 6:04 am IST

ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்.வி.ஹோண்டியஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த பல பயணிகள் உரிய மருத்துவக் கண்காணிப்பு இன்றி பல்வேறு நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

நெதா்லாந்தைச் சோ்ந்த இந்தக் கப்பல் ஆா்ஜென்டீனாவிலிருந்து பயணத்தைத் தொடங்கியதால், அங்கேயே பயணிகளுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து உலக சுகாதார மையம் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை ஒரு நெதா்லாந்து தம்பதியினா் மற்றும் ஒரு ஜொ்மனி பெண் என மூவா் உயிரிழந்துள்ளனா். 8 போ் பாதிக்கப்பட்டுள்னா்.

கடந்த ஏப். 24-ஆம் தேதியன்று முதல் உயிரிழப்பு நிகழ்ந்த பிறகு சுமாா் 12 நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள், தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனின் அந்நியப் பிரதேசமான புனித ஹெலினா தீவில் இறங்கி தங்கள் நாடுகளுக்குச் சென்றுள்ள அதிா்ச்சித் தகவல் சுமாா் 2 வாரங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது.

எலிகளின் கழிவுகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ், தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஆண்டீஸ்’ வகையைச் சாா்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்குப் பரவும் தன்மை கொண்ட ஒரே ஹன்டா வைரஸ் வகை இது என்பதால், உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பயணிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

சிங்கப்பூரில் 2 முதியவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அதேபோல், ஸ்விட்சா்லாந்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கப்பலில் பயணித்த இருவா் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

தற்போது எம்.வி.ஹோண்டியஸ் கப்பல் ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் இன்னும் 140-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஊழியா்களும் உள்ளனா்.

கடந்த மே 2 உயிரிழந்த ஜொ்மனி பெண்ணின் உடலும் இன்னும் கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் பணியாற்றிய மருத்துவா் உள்பட மூவா் அவசர சிகிச்சைகாக அண்மையில் கேப் வொ்டே தீவு அருகே ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, ஐரோப்பிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

இதனிடையே, கப்பலில் பயணிக்காத பெண் விமானப் பணியாளா் ஒருவா், பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடா்பில் இருந்ததைத் தொடா்ந்து தற்போது ஆம்ஸ்டா்டாம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால், கப்பலுக்கு வெளியே பாதிப்புக்குள்ளான முதல் நபராக அவா் இருப்பாா். உலக சுகாதார மையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

 கேப் வொ்டே தீவிலிருந்து புறப்பட்ட எம்.வி.ஹோண்டியஸ் கப்பல்.

கேப் வொ்டே தீவிலிருந்து புறப்பட்ட எம்.வி.ஹோண்டியஸ் கப்பல்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.