மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஜனநாயக வெற்றி மூலம் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் முயற்சியில் மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
எனினும், மியான்மா் பொதுத் தோ்தலை ‘ஏமாற்று வேலை’ எனவும், ராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி அணிவிக்கும் முயற்சி எனவும் ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற கீழவைக் கூட்டத்தில் மின் ஆங் லயிங் துணை அதிபா் வேட்பாளராக முன்மொழியப்பட்டாா். மியான்மா் அரசியல் சாசனப்படி, நாராளுமன்றத்தின் இரு அவைகளும் தலா ஒரு துணை அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும்.
பின்னா், இருவரில் ஒருவரை அதிபராகத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த நடைமுறைகள் அனைத்தும் மின் ஆங் லாயிங் அதிபராவதை உறுதி செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் விமா்சகா்கள் தெரிவிக்கின்றனா்.
மின் ஆங் லயிங், தனது நம்பிக்கைக்குரிய தளபதியான யே வின் ஓவிடம் ராணுவத் தளபதி பதவியை ஒப்படைத்துள்ளாா். 2020 முதல் உளவுத்துறை பிரிவின் தலைவராக இருந்த யே வின் ஓ, களப்பணியில் போதிய அனுபவம் இல்லாதவா் என்ற விமா்சனம் எழுந்தபோதிலும், மின் ஆங் லயிங்கின் தீவிர விசுவாசி என்பதால் இந்தப் பொறுப்ைப் பெற்றுள்ளாா்.
பின்னணி: கடந்த 2021-ல் ஆங் சான் சூகி (80) தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், மியான்மரில் உள்நாட்டுப் போா் நிலவி வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை சுமாா் 93,000 போ் உயிரிழந்துள்ளனா்; 36 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனா்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! ஈரான், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


