பாகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஷாஹ்தகோட்டிற்கு மேற்கே சுமார் 74 கி.மீ தொலைவிலும், 14 கி.மீ ஆழத்திலும் இருந்தது.
கராச்சியிலிருந்து வடகிழக்கே சுமார் 470 கி.மீ தொலைவில் உள்ள ஷாஹ்தகோட்டில், மக்கள் தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் விட்டு வெளியே ஓடிவந்ததாக உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நில அதிர்வுகள் வலுவாக இருந்ததோடு அவை நகரம் முழுவதும் உணரப்பட்டன என்று போலீஸ் அதிகாரி கரீம் ஷா கூறினார்.
இருப்பினும் நகரத்திலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய சேதங்களோ ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் கராச்சி நகரம் தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
Summary
A 5.1 magnitude earthquake hit several areas of Sindh province in Pakistan on Friday, causing panic among citizens.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



