மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு! - ஈரான்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளதைப் பற்றி...

News image

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல். - ஏபி.

Updated On :26 மார்ச் 2026, 3:15 am

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

25 நாள்களையும் கடந்து போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது.

இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் சிக்கின. இதனால் இந்தியாவில் மக்களிடையே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக உலக வர்த்தகத்தில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பை அளித்துவரும் கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் நிரந்தரமாக மூடியது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு அதனை அமெரிக்காவும் ஈரானும் நிர்வகிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அவரின் பேச்சை முற்றிலுமாக மறுத்த ஈரான், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மட்டுமே நிர்வகிக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 5 நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அபாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அபாஸ் அராக்சி  பேசுகையில், “நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் நீரிணையைக் கடந்து சென்றன. நாம் ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம்.

இந்தப் பகுதியில் போர் சூழ்ந்திருக்கிறது. நமது எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை இதன் வழியே செல்ல அனுமதிக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், இது மற்ற நட்பு நாடுகளுக்குத் திறந்தே இருக்கிறது” என்றார்.

Summary

Amid the escalating conflict in the Middle East, Iran announced that it would not impose a blockade on vessels belonging to five friendly nations, including India, in the Strait of Hormuz. Other than India, ships from Russia, China, Pakistan, and Iraq have been allowed safe passage through the conflict-torn chokepoint.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.