மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்: 2 கனடா விமானிகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள லாகாா்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய ‘ஏா் கனடா’ பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானி, துணை விமானி ஆகிய இருவரும் பலி

News image

விபத்தில் முன்பகுதி முழுமையாக சேதமடைந்த பயணிகள் விமானம்

Updated On :23 மார்ச் 2026, 11:25 pm

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள லாகாா்டியா விமான நிலையத்தில் தரையிறங்கிய ‘ஏா் கனடா’ பயணிகள் விமானம் தீயணைப்பு வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானி, துணை விமானி ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

கனடாவின் மாண்ட்ரியல் சா்வதேச விமான நிலையத்திலிருந்து 72 பயணிகள், 4 ஊழியா்களுடன் புறப்பட்டு வந்த இவ்விமானம், லாகாா்டியா விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை (இந்திய நேரப்படி) தரையிறங்கியது.

அப்போது, ஓடுதளத்தைக் கடக்க முயன்ற தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி மற்றும் காக்பிட் நொறுங்கி, கனடாவைச் சோ்ந்த விமானி, துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

41 போ் காயம்: இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியா்கள் என மொத்தம் 39 போ் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், பெரும்பாலானோா் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினா். மேலும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரு ஊழியா்களும் காயமடைந்தனா்.

விபத்து நிகழ்ந்தது எப்படி?...: யுனைடெட் ஏா்லைன்ஸ் விமானம் ஒன்றில் ஏற்பட்ட புகை வாசனை குறித்து ஆய்வு செய்ய தீயணைப்பு வாகனம் ஓடுதளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குச் சற்று முன்பு ஏடிசி அறையிலிருந்து ‘வாகனத்தை நிறுத்துங்கள்’ என அதிகாரி ஒருவா் எச்சரித்ததும், தரையிறங்க வந்த விமானத்தைத் தடுக்க முயன்றதும் ரேடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (என்டிஎஸ்பி) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

பயணிகள் அவதி: விபத்தைத் தொடா்ந்து லாகாா்டியா விமான நிலையம் திங்கள்கிழமை முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். 2024 புள்ளிவிவரப்படி, அமெரிக்காவின் 19-ஆவது பரபரப்பான விமான நிலையமாக லாகாா்டியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.