அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தாமாக வெளியேறினால், விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தாமாக முன்வந்து வெளியேறினால், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
இதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தாமாக முன்வந்து வெளியேறினால், விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படுவதுடன், 2,600 அமெரிக்க டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.42 லட்சம்) வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்த சலுகைத் தொகை 1000 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 2,600 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், நாட்டைவிட்டு வெளியேறும் ஒருவருக்கு அமெரிக்க அரசால் 5,000 டாலர் வரையில் செலவழிக்கப்படும்.
இருப்பினும், சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து வெளியேற்றினால், 18,000 டாலர் வரையில் செலவாகும் என்பதால், தற்போதைய அறிவிப்பின்படி அமெரிக்க அரசுக்கு 13,000 டாலர் மிச்சமே.
Summary
Get Rs 2.4 lakh, fly to India for free: US Offers Illegal Immigrants For Self-Deportation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!
அமெரிக்க பாடகரை உருவ கேலி செய்த டிரம்ப்! உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


