இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரின்போது கௌரௌஷ் கெய்வானி சிக்கியதாகவும், அவர் 6 ஐரோப்பிய நாடுகளில் உளவாளிக்கான பயிற்சிகளைப் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கௌரௌஷ் கெய்வானியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஈரானின் அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
An Israeli spy has reportedly been executed in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய ஈரானின் கடற்படைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


