ஈரானில், 10 வெளிநாட்டு உளவாளிகளைக் கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 முதல் ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 10 உளவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் புலனாய்வுப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஈரானின் முக்கிய பொருளாதரக் கட்டமைப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்ததாகவும், மீதமுள்ளவர்கள் மன்னராட்சியை ஆதரிக்கும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட உளவாளிகள் 10 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி, உள்பட அந்நாட்டின் ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரின் கொலைகளில் இஸ்ரேலிய உளவாளிகள் அளித்த தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஈரானில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை எதிர்த்து சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran's Revolutionary Guards have announced the arrest of 10 foreign spies in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

கமேனிக்குப் பிறகு..! ஈரானின் மூத்த தலைவர் அலி லார்ஜானி கொலை?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



