மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போர் எதிரொலி! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

மத்திய கிழக்கு போரால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து....

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 6:38 am

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா, ரூ.55 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு ஒரே நாளில் விலை உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை ஆகும். இது மார்ச் 7 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக், துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், நாட்டில் போதுமான அளவுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல்களைப் பெற்று செல்கின்றனர்.

குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 25% வரை உயர்ந்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடர்ச்சியால், பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசியத் தேவைப்பொருள்கள் விலை உயர்ந்து காணப்படுகின்றன.

Summary

The prices of petrol and diesel have increased significantly in Pakistan due to the repercussions of the war.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.