பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வாகும்.
அதன்படி, பாகிஸ்தானில் டீசல் விலை 55 சதவீதமும், பெட்ரோல் விலை 43 சதவீதமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 137.23 (42.7 சதவீதம்) உயர்த்தப்பட்டு, ரூ. 321.17-லிருந்து ரூ. 458.41-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 184.49 (55 சதவீதம்) உயர்த்தப்பட்டு, ரூ. 335.86-லிருந்து ரூ. 520.35-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அந்த நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Amidst the joint war being waged by the United States and Israel against Iran—and with global crude oil prices having surged sharply—petrol and diesel prices in Pakistan have risen once again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு

கலால் வரி குறைப்பு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

போர் எதிரொலி! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



