அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்

நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என்று இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் தெரிவித்தது பற்றி...

News image

இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார். - படம் - ஏஎன்ஐ

Updated On :15 ஜூன் 2026, 9:45 pm IST

நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், திங்கள்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாமல் இருந்த காரணத்தால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், உலகின் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய, இந்த 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்ததன் மூலம், ஒப்பந்தம் இறுதியானதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியுள்ளது. இறுதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில்  நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார் பேசியதாவது:

நான் இதை பல நேர்காணல்களில் கூறியுள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். இஸ்ரேல் மீதான அவர்களின் அணுகுமுறை, அவர்களின் பாதுகாப்பு அமைச்சரின் யூத-விரோதக் கருத்துகள் போன்றவற்ற்றை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ரூவன் அஸார் தெரிவித்தார்.

Summary

Israel's Ambassador to India, Reuven Azar, stated on Monday (June 15) that they do not trust the Pakistanis.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.