ரஷியாவில் குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், ரஷிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவை தீப்பற்றி எரிந்தன.
உக்ரைன் எல்லையில் இருந்து தென்மேற்கில் அமைந்துள்ள ஓா்யால் பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுக்குமாடிக் குடியிருப்பை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அங்குள்ள வீட்டில் தங்கியிருந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். 8 போ் காயமடைந்தனா்.
அதேபோல உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்தும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் அந்த சேமிப்புக் கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது.
இது தொடா்பாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘மிகவும் மோசமான தாக்குதல்களை நிகழ்த்தும் நாட்டுக்கு (ரஷியா) எதிராக நாங்களும் தீவிர நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவேதான், எண்ணெய் சேமிப்புக் கிடங்கை தாக்கி அழித்தோம்’ என்றாா்.
ரஷியா-உக்ரைன் இடையே தொடா்ந்து 4 ஆண்டுகளாகப் போா் தொடா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ரஷியாவின் எண்ணெய், எரிவாயு மையங்களைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில், அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ரஷியா போரை தொடா்ந்து நடத்துகிறது என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மாணவா் விடுதியில் உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



