இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை அழித்துவிடுவேன்: டிரம்ப் மிரட்டல்!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

News image

டொனால்ட் டிரம்ப். - ஏபி

Updated On :7 ஜூன் 2026, 11:38 pm IST

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் இன்று வெளியானது. அதில், "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முடிவில் இருக்கிறோம். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நான் ஈரானைக் கடுமையாகத் தாக்கித் அழித்துவிடுவேன்” என்று பேசியுள்ளார்.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான தடைகளை நீக்கவும் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது அதற்கு இல்லை என டிரம்ப் பதிலளித்தார்.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரையில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதுபற்றிப் பேசுகையில், "ஒப்பந்தம் முடிவான பிறகே அதுபற்றி முடிவு செய்வோம். அவர்கள் சரியான விதத்தில் நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். ஒப்பந்தம் செய்து நட்புறவுடன் இருந்தால் அவர்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுத்து அழித்துவிடுவோம்” எனக் கூறினார்.

ஈரானுக்கு எதிரான போரின் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டுவதில் அவர்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் முக்கியப் பங்காற்றி வருகின்றது. மேலும், ஈரானிடமிருந்து முடக்கப்பட்ட சொத்துகளைக் கொண்டு அவர்களால் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளுக்கு உதவ அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது மேற்கொண்டு துல்லியமான தாக்குதல்களை நடத்தவேண்டும்” என்றும் அந்த நேர்காணாலில் டிரம்ப் தெரிவித்தார்.

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் அங்கு தொடர்ந்து தாக்குதல்களைத் நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.

Summary

Trump has threatened Iran if negotiations regarding the ceasefire agreement fail.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.