இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News image

ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி / அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் / இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 7:34 pm IST

இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு ஈரான் தாக்குதலைத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானும் இஸ்ரேலும் போர்நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில், “இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடையே அறியாமை அல்லது முட்டாள்தனம் குறுக்கிடாத முறையில், இறுதிக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, போர்நிறுத்தம் முழு வீச்சில் அமல்படுத்தப்படும். அனைத்து விஷயங்களும் விரைவாக நடந்து முடியும்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Summary

US President Donald Trump has stated that efforts are being made for a ceasefire between Israel and Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.