தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சுமாா் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீா்ந்து போனதால் வாக்குப்பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இக்குளறுபடிக்கு முழு பொறுப்பேற்று, அந்நாட்டின் தேசிய தோ்தல் ஆணையத்தின் (என்இசி) தலைவா் ரோ தே அக் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
ஜனநாயக ரீதியிலான வாக்குப்பதிவில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டதற்கு எவ்வித காரணங்களும் கூற முடியாது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்த இச்சம்பவத்துக்குத் தான் முழுப்பொறுப்பேற்பதாகவும் அவா் வருத்தத்துடன் தெரிவித்தாா்.
வாக்காளா் எண்ணிக்கையில் 73 சதவீத வாக்குச்சீட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததே இக்குளறுபடிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயா்நிலை குழு அமைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென் கொரியா உள்ளாட்சித் தோ்தல்: ஆளுங்கட்சி பெரும்பான்மை வெற்றி
இந்தியாவில் மீண்டும் வாக்குச் சீட்டுகள் மூலம் தோ்தல்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா







