ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஈரானுக்கு ஆதரவாகப் போரில் களமிறங்கும் ஹவுதிகள்! சௌதி கப்பல்கள் மீது தாக்குதல்!

செங்கடல் பகுதியில் சௌதி அரேபியா கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து...

Houthis say they attacked 2 Saudi oil tankers in the Red Sea

கப்பல் மீது தாக்குதல் - ANI | (கோப்புப் படம்)

Published On :23 ஜூலை 2026, 6:34 pm IST

செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது யேமனின் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் சென்ற சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் வியாழக்கிழமை (ஜூலை 23) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலினால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் புதிய பிரிவு உருவாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற வேண்டுமெனும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து 12 நாள்களாக ஈரானின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனிடையே, பெரும்பாலான செங்கடல் பகுதியைக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதிகள் சௌதி கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹவுதிகள் களமிறங்கினால் அமெரிக்காவுக்கு ஆதாரவாக மீண்டும் இஸ்ரேலிய படைகள் போர் தாக்குதல்களில் ஈடுபடும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஹவுதிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கெனவே, அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Yemen's Houthis have attacked Saudi Arabian commercial ships in the Red Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.