ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

14 நாடுகள் உடன் கைகோக்கும் சௌதி! உருவானது செங்கடல் பாதுகாப்பு கூட்டணி!

சௌதி அரேபியாவின் தலைமையில் செங்கடல் பாதுகாப்பு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...

Red Sea defence alliance

சௌதி அரேபியாவின் பிரதமரும், பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் - கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST

14 வெளிநாடுகள் உடன் இணைந்து செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளதாக சௌதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் கப்பல்களுக்கு யேமனின் ஹௌதி படைகள் தடை விதித்துள்ளன.

உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதிகள் கட்டுப்படுத்தி வருவதால், அவ்வழியாகச் செல்ல முயலும் சௌதி கப்பல்கள் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பாப் அல்-மண்டாப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக செங்கடல் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க சௌதி அரசு கடந்த ஜூலை 30 அன்று முன்மொழிந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணிக்கான கூட்டறிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதில் 13 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் சௌதி அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பஹ்ரைன், வங்கதேசம், கொமொரோஸ், ஜிபூட்டி, எகிப்து, சோமாலியா, சூடான், துருக்கி மற்றும் யேமன் (சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு) ஆகியவை இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Saudi Arabian government has announced the formation of an alliance with 14 other countries to ensure security in the Red Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.