ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

சௌதி அரேபியாவின் 48 கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியுள்ளதாக ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது குறித்து...

houdi's against saudi arabia

ஹௌதி ராணுவ வீரர்... - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 8:11 pm IST

சௌதி அரேபியாவின் 48 எண்ணெய்க் கப்பல்களை முடக்கித் திருப்பி அனுப்பியுள்ளதாக, யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.

ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்வதற்கு ஹௌதி கிளர்ச்சிப்படை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 20 முதல் தடையை மீறி செங்கடலின் நுழைவு வாயிலான “பாப் அல் - மண்டாப்” நீரிணை வழியாகச் செல்ல முயன்ற சௌதியின் 48 எண்ணெய்க் கப்பல்களின் பாதையை முடக்கி அவற்றை திருப்பி அனுப்பியதாக, ஹௌதிகள் இன்று (ஆக. 19) அறிவித்துள்ளனர்.

இத்துடன், செங்கடலில் 5 கப்பல்கள் மற்றும் ஏடன் வளைகுடாவில் 5 கப்பல்கள் என சௌதியின் 8 எண்ணெய்க் கப்பல்கள் மீது ஹௌதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவின் யான்பு, நஜ்ரான், ஜிசான், அபா உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணெய்க் கட்டமைப்புகள் மீது 9 ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக, ஹௌதி படை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Summary

Yemen's Houthi rebels have announced that they have intercepted and turned back 48 Saudi Arabian oil tankers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.