ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செங்கடலில் சௌதியின் கப்பல் மீது ஹௌதிகள் தாக்குதல்! உருவாகிறதா புதிய போர்?

செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பலின் மீது ஹௌதிகள் ஏவுகணைத் தாக்குதல்...

saudi arabia oil tanker attacked

சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பலின் மீது யேமனின் ஹௌதிகள் தாக்குதல்... - கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:13 pm IST

செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பலின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், ஈரானிய படைகளுக்கு ஆதரவாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைகள் களமிறங்கியுள்ளன. இதனால், வளைகுடா மற்றும் செங்கடலை ஒட்டிய நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

உலகின் 12 சதவிகிதம் வணிகத்தின் போக்குவரத்து பாதையான செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் எனும் நீரிணையை ஹௌதிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தப் போரில், அவ்வழியாகச் சென்ற எதிராளிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஆதரவு நாடான சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பலின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக, ஹௌதிகளின் செய்தித்தொடர்பாளர் யஹியா சரீ இன்று (ஆக. 5) அறிவித்துள்ளார்.

இத்துடன், செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியுள்ளதாகவும், 29 எண்ணெய்க் கப்பல்களின் பாதையை முடக்கி அவற்றை திருப்பி அனுப்பியதாகவும் ஹௌதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செங்கடல் பகுதியின் வழியாகச் செல்வதற்கு சௌதி அரேபியாவின் கப்பல்களுக்குக் கடந்த ஜூலை மாதம் முதல் யேமனின் ஹௌதிகள் தடை விதித்துள்ளனர்.

இந்தத் தடையை மீறி அவ்வழியாகச் செல்ல முயன்ற சௌதி கப்பல்கள் மீது ஹௌதிகள் சரமாரித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், சௌதி அரசுக்கும் ஹௌதிகளுக்கும் இடையே போர் உருவாகும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Yemen's Houthi rebels attacked Saudi Arabian oil tanker in the Red Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.