ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 20 குழந்தைகள் பலி

உகாண்டாவில் பள்ளி பேருந்து விபத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...

At least 20 children, 1 adult killed in Uganda elementary school bus crash

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணி. - (Ugandan Red Cross via AP)

Published On :17 ஜூலை 2026, 7:01 pm IST

உகாண்டாவில் தொடக்கப்பள்ளி பேருந்து விபத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பலியாகினர்.

உகாண்டாவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 20 குழந்தைகளும் ஒரு பெரியவரும் பலியாகினர் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கிழக்கு உகாண்டாவின் கப்சோர்வா மாவட்டத்தில் உள்ள சிபி நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பும் வழியில் வியாழக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்ததாக உகாண்டா போலீஸ் படை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிர் பிழைத்த மூன்று பெரியவர்கள் மற்றும் பல குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையை போலீஸார் உடனடியாக வெளியிடவில்லை. விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு ஒரு பாறையின் மீது மோதி கவிழ்ந்ததாகக் போலீஸ் அறிக்கையில் கூறியுள்ளது.

இருப்பினும், இது ஆரம்பகட்டத் தகவல் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

An elementary school bus carrying pupils back from an educational tour to a scenic waterfall in Uganda veered off the road and overturned, killing at least 20 children and one adult, police said Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.