ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!

ஹிமாசலில் தனியார் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது பற்றி...

Himachal Pradesh accident: 7 killed, 11 injured after bus crashes on Teesa-Bairagarh road

ஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து - X

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:21 pm IST

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சலுன்ஜ் மோர் பகுதி அருகே பயணிகள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சல் மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் திஸ்ஸா-பைராகர் (Tissa-Bairagarh) வழித்தடத்தில் உள்ள சலுன்ஜ் மோர் (Chalunj Mor) பகுதி அருகே 18 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Story image

இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலே உள்ள சாலையில் இருந்து கீழிறங்கும் சாலைக்கு பேருந்து திரும்பும்போது கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சென்ற பகுதி அதிக வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Himachal Pradesh accident: 7 killed, 11 injured after bus crashes on Teesa-Bairagarh road

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.