
மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்
ஹிமாசலில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டிருப்பது பற்றி...

ஹிமாசல்.
ஹிமாசலில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 121 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை மையம் வெள்ளிக்கிழமை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலத்தில் மொத்தம் 121 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மண்டியில் 41, குலுவில் 24, சம்பாவில் 23 சாலைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. கனமழையைத் தொடர்ந்து சிம்லாவில் 13, சிர்மூரில் 7, காங்கிராவில் 6, லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் 5, பிலாஸ்பூர் மற்றும் உனா மாவட்டங்களில் தலா 1 சாலை என வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, மாநிலத்தில் 89 குடிநீர் விநியோகத் திட்டங்களும் 43 மின் மாற்றிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழன் இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, சிம்லா நகரின் புறநகர்ப் பகுதியான மெஹ்லி-ஜுங்கா சாலையில் உள்ள சில வீடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி பகுதியில் அதிகபட்சமாக 76.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே கீலாங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
Summary
Shimla Met office on Friday issued an orange warning of heavy to very heavy rain in places in Himachal Pradesh from July 27 to 29.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






