ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு சௌதி அரேபியா கண்டனம்...

Iran's missile attack on the gulf countries

வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - AP

Published On :16 ஜூலை 2026, 10:39 pm IST

குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய படைகளின் தாக்குதலுக்கு சௌதி அரேபியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது கடந்த ஜூன் மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையின் அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக இராக், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல்கள் நியாயமற்றவை எனவும், ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் சௌதி அரேபியா அரசு இன்று (ஜூலை 16) அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த பிப்.28 அன்று ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 9 அன்று நடைபெற்ற கமேனியின் இறுதிச்சடங்கில் சௌதி அரேபியா, கத்தார், யேமன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Saudi Arabia has condemned the attacks by Iranian forces on Gulf nations, including Kuwait and Bahrain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.