ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! - ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகையால் அதிர்ச்சி...

anti trump bill board

ஈரான் தலைநகரில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பதாகை... - ஏபி

Published On :16 ஜூலை 2026, 6:18 pm IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இருதரப்புக்கும் இடையே போர் வெடித்ததால் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கடந்த ஜூலை 9 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

இத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஏற்கெனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.

Summary

A banner displayed in Iran, depicting US President Donald Trump in a coffin, has drawn international attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.