
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரான், அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. மறுபக்கம் ஈரானும், அமெரிக்காவும் மத்தியஸ்தா்கள் மூலம் பேச்சுவாா்த்தைக்கான முயற்சியையும் எடுத்து வருகின்றன.
சமீபத்தில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டருமான முகம்மது பாஹா் ஜோல்காதா் பேசுகையில், ”ஈரானை அமெரிக்கா மீண்டும் மிரட்டக் கூடாது. ஈரான் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஈரானின் கூட்டாளிகளுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிக்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். ஈரான் சொத்துகள் மீதான முடக்கத்தை நிபந்தனையின்றி நீக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானிடம் இழப்பீடு கேட்போம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், “ஈரான் அரசின் பிரதிநிதிகள், அவர்கள் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது எனத் தொடங்கிய கடந்த 5 மாத கால ராணுவ மோதலில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதைக் காண்கிறேன். நம்மிடம் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எதிலும் அவர்கள் இதுபற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இது ஒரு சுவாரஸ்யமான யோசனை.
ஏனென்றால், ராணுவ அதிகாரி ஜெனரல் சொலைமானியின் தலைமையின் கீழ் ஈரான் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்காக இப்போது நானும் ஈரானிடம் இழப்பீடு கேட்கிறேன்.
அதேபோல, கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்று குவித்த லட்சக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரையும் இதில் குறிப்பிடாமல் இருக்கக் கூடாது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கைகளை உறுதியாக முன்வைக்குமாறு அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
US President Donald Trump has stated that Iran must pay compensation to the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






