
அமேசானின் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்! வளைகுடாவில் சேவை முடக்கம்?
பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய படைகள் அறிவிப்பு...

அமேசான் - IANS
பஹ்ரைன் நாட்டில் உள்ள அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய படைகள் அறிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது முதல் இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அமெரிக்க படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் தனியார் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், பஹ்ரைன் நாட்டிலுள்ள அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான தரவு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் இன்று (ஜூலை 24) அறிவித்துள்ளன.
இதுபற்றி, ஈரானிய படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“குழந்தைகளைக் கொலை செய்யும் அமெரிக்க ராணுவத்துக்கு உளவுத்துறை சார்ந்த ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்காற்றும் அமெரிக்க நிறுவனமான அமேசானின் உளவுத் தரவு மையக் கட்டடம் குறிவைத்து அழிக்கப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளதால், வளைகுடா நாடுகளில் அந்நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு சேவைகள் முடங்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து பஹ்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசுகள் மற்றும் அமேசான் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
Summary
Iranian forces have announced that they have carried out attacks on facilities belonging to Amazon in Bahrain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






