மோடியை பதவி விலகச் சொல்லுங்கள்! மெலோனி இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள்!!
மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று மெலோனி இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள் பற்றி

ரோம் நகரில், பிரதமர் நரேந்திர மோடி உடன் கலந்துரையாடும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து வருவது, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.
இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.

மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது "அன்பிற்குரிய நண்பரான" மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது பேசுபொருளாகியிருக்கிறது.
ஜூலை 20ஆம் தேதி, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த நிலையில், உலகத் தலைவர்களில், பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நட்பாகப் பழகும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏராளமானோர் நீட் தேர்வு குறித்துப் பேசியிருக்கிறார்கள். இந்திய மாணவர்களின் குரல்களைக் கேளுங்கள், உங்கள் அருமை நண்பரை பதவி விலகச் சொல்லுங்கள், அடுத்த முறை பிரதமர் மோடியைப் பார்க்கும்போது இந்திய மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதி என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றெல்லாம் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன
Summary
Ask Modi to step down Requests flood Melonis Instagram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






