ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!

ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையேயான முக்கிய ரயில் பாதை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து...

us attacks irans railway bridge

அமெரிக்கா தாக்குதல்... - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 8:31 pm IST

ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடனான ஈரானின் முக்கிய ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றும் வரும் நிலையில், இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், ஈரானின் வடக்கு மாகாணமான கோலெஸ்தானில் உள்ள ஆக்டே கான் ரயில் பாலத்தின் மீது இன்று (ஜூலை 9) அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே பாலம், சீனா மற்றும் துர்க்மெனிஸ்தான் உடனான ஈரானின் வழித்தடங்களில் முக்கிய பாதையாகக் கருதப்படுகிறது. மேலும், ரஷியா மற்றும் சீனாவை ஈரானுடன் இணைக்கும் இந்த ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Summary

US carried out an attack on a key Iranian railway line connecting the country to Russia and China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.