ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீனாவில் கடும் வெள்ளம்: பண்ணையிலிருந்து தப்பிய 900 பாம்புகள்; மக்கள் அச்சம்

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 900 பாம்புகள் வெளியேறியது குறித்து...

சீனாவில் தப்பிய 900 பாம்புகள்

Published On :9 ஜூலை 2026, 7:56 pm IST

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 900 பாம்புகள் வெளியேறியதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

சீனாவின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் இதுவரை சுமார் 40 பேர் பலியாகினர்.

மேசாக் புயல் காரணமாக பெய்து வரும் இத்தொடா் மழையால், சீனாவின் 62-க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ளநீா் ஆபாயக் கட்டத்தைக் கடந்து பாய்கிறது. இதையொட்டி, அப்பகுதியில் வசித்த 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நான்னிங் நகரில் உள்ள அணை உடைந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இதுவே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.

அதேபோல, தைவானின் தென் பகுதியில் பாவி புயல் காரணமாக கனமழை ஏற்பட்டு பல பகுதிகளில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவில் உள்ள ஒரு பண்ணையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பண்ணையிலிருந்த சுமார் 900 பாம்புகளும் வெள்ளத்தில் வெளியேறின. இருப்பினும், வெளியேறிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றும், பாம்புகளைப் பிடிக்க மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் வெள்ளம்

சீனாவில் வெள்ளம் - AP

சீனாவில் 5,700 படகுகள், ட்ரோன்கள் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் படையினர் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குயிகாங் நகரில், பல பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் சிக்கிய 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர்.

சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் வேளையில், 60,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் வடிந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு பல இடங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.

Summary

900 Snakes Escape After Floods Destroy Snake Farm in China

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.