ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா!

ராமாயணா திரைப்படம் சீனாவில் அதிக திரைகளில் வெளியாகிறது...

Scenes from the movie Ramayana.

ராமாயணா படத்தின் காட்சிகள். - படம்: யூடியூப் / வேல்ட் ஆஃப் ராமாயணா.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:12 pm IST

ராமாயணா திரைப்படத்தைச் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் எகிறியுள்ளது.

இந்த டிரைலர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஹிந்தி டிரைலர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

பான் திரைப்படமான ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைச் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்திற்கே ரூ. 2000 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கியுள்ளதால் இதனை வெற்றிப்படமாக்க உலகளவில் வெளியிட விநியோகிஸ்தர்களும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

The production company plans to release the movie Ramayana on a grand scale in China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.