ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏ. ஆர். ரஹ்மான் நடுவராகப் பங்கேற்கும் முதல் தமிழ் இசை நிகழ்ச்சி!

ஏ. ஆர். ரஹ்மான் நடுவராகப் பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி...

ஏ. ஆர். ரஹ்மான்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:44 pm IST

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க உள்ளார்.

தமிழ்த் தொலைக்காட்சியில் சோனி நிறுவனம் தன்னுடைய சோனி விழா என்கிற புதிய சேனலை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன், முதல் நிகழ்ச்சியாக நடிகை சமந்தா நடுவராக பங்கேற்கும் மாஸ்டர் செப் (master chef) சமையல் நிகழ்ச்சிக்கான டீசரையும் வெளியிட்டிருந்தனர்.

தற்போது, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இந்த சேனலில் தமிழ் ஐடல் (idol) என்கிற புதிய இசைத்திறமையைக் கண்டறியும் நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் உலக அளவில் பிரபலமான ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக இசை நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தீபாவளியன்று இந்த சேனலை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது. அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் இந்த சேனலில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Music composer A. R. Rahman is set to participate as a judge in a television music show for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.