ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்பட இசையை காப்பியடித்த அனிருத்?

அனிருத்தின் புதிய பின்னணி இசை காபி என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்...

anirudh

இசையமைப்பாளர் அனிருத்

Published On :26 ஜூலை 2026, 12:39 pm IST

இசையமைப்பாளர் அனிருத் டிசி திரைப்படத்தில் நகலெடுத்த இசையைப் பயன்படுத்தியதாகச் சர்ச்சையாகியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக ’டிசி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகுகிறார்.

இந்தப் படம் வருகிற ஆக. 7 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளதால் இதன் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. முக்கியமான, நீண்ட காலம் கழித்து அனிருத் இசையில் இப்படத்திற்காக பாடல்களுடன் கூடிய பின்னணி இசைகள் 15 வெளியாகியுள்ளது. அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதனால், அனிருத் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதுடன் திரும்பத் திரும்ப பாடல்களைக் கேட்டு பகிர்கின்றனர். ஆனால், அதேநேரம், இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற ரிவெஞ்ச் ராகாவின் இசைக்கருவிகளைக் கொண்ட கவுன்ட்டர் பாயிண்ட் பின்னணி இசை, பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்படத்திற்காக ஹான்ஸ் சிம்மர் இசையமைத்த மேரி மீ (marry me) இசையுடன் ஒத்து போவதால் ரசிகர்கள் அனிருத் காப்பியடித்துவிட்டார் என கூறி வருகின்றனர்.

ஏற்கனவே, நிறைய முறை காபி சர்ச்சைகளில் அனிருத் சிக்கியிருந்தார். ஆனால், தொடர்புடைய இசையமைப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பும் வரவில்லை. மேலும், ஏஐ இசைகளை வாங்கி அதனை மேம்படுத்தி அனிருத் பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Music composer Anirudh has sparked controversy for using plagiarized music in a DC film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.