ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆஷா போஸ்லே நினைவு நிகழ்ச்சியில் லெஜெண்ட் ரஜினிகாந்த்: ஏ.ஆர். ரஹ்மான் நன்றி

மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் நினைவு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியது குறித்து...

Rajinikanth | AR Rahman

கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:14 pm IST

மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் நினைவு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே, கடந்த ஏப்ரல் 12-ல் மாரடைப்பால் காலமானார். இவர், 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் கலைப் பயணம் நீடித்தது.

இந்த நிலையில், ஆஷா போஸ்லேவின் நினைவைப் போற்றும் வகையில், அவரது இசைப் பயணத்தையும் இசை உலகில் அவரின் பங்களிப்பையும் போற்றும்வகையில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷாருக்கான், சல்மான்கான் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்துக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த சமூக ஊடகப் பதிவில் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது, "கோடிக்கணக்கான ரசிகர்களால் நேசிக்கப்படும் ஒரு லெஜெண்ட், மற்றொரு லெஜெண்டை கௌரவிப்பது, உண்மையிலேயே சிறப்பான தருணமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் பாடலை ஆஷா போஸ்லேதான் பாடியிருந்தார்.

Summary

Actor Rajinikanth joined in AR Rahman tribute music video for Asha Bhosle

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.