
இந்திய சினிமாவில் முதல் முறை... 100 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரைலர்!
ராமாயணா டிரைலர் புதிய சாதனையைச் செய்தது...

ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் எகிறியுள்ளது.
காரணம், இந்த டிரைலரில் ஒவ்வொரு காட்சிகளுக்குமான விஎஃப்எக்ஸ் பணிகள், செரிவான ஒளியமைப்புகள் அனைத்தும் அபாரமான அனுபவத்தைக் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், ராமாயணா முதல் பாகத்திற்கான டிரைலர் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த டிரைலர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஹிந்தி டிரைலர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
பான் திரைப்படமான ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது.
It has been announced that the trailer for the movie Ramayana has crossed 100 crore views.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







