ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பற்றி...

Trump

துருக்கியில் நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :8 ஜூலை 2026, 2:55 pm IST

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

ஈரான்-அமெரிக்கா இடையே மூன்று மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போர், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.

இதையடுத்து கடந்த 20 நாள்களாக அமைதி நிலவி வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். பதிலுக்கு பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், துருக்கி நேட்டோ மாநாட்டில் பேசிய டிரம்ப், ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், “இனியும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. முழு அளவிலான போருக்கு அமெரிக்கா திரும்பியுள்ளது. ஈரானியர்கள் ஒரு பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானின் புனித நகரான கோமுக்கு கொண்டு வரப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்து தலைமறைவாக இருக்கும் தற்போதைய ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அயதுல்லா அலி கமேனியின் உடல் நாளை (ஜூலை 9) அவா் பிறந்த மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Summary

Iran-US ceasefire agreement cancelled - Trump announces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.