வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்து...

News image

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 10:23 pm IST

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதல் தாக்குதல் ஓமன் அருகே நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தாக்குதலில் கப்பல் முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனிடையே தற்போது மூன்றாவத் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், சர்வதேச வணிகத் தடமான ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வணிக நடவடிக்கைகளுக்கான மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

எண்ணெய் கப்பல் மட்டும் சேதமடைந்ததாகவும் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று, ஓமன் கடற்கரை அருகே மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த கப்பல், தாக்குதலில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

இது தொடர்பாக பேசிய கத்தார் செய்தித் தொடர்பாளர் மஜேத் அல்-அன்சாரி, போர்நிறுத்தத்திற்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், முற்றிலும் எதிர்பாராதது என்றும், சர்வதேச விதிமீறல் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மூன்றாவது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 14 அம்ச கோரிக்கைகளுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 200க்கும் அதிகமான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற நிலையில், இன்று மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதற்கு ஈரானே காரணம் என கத்தார் உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடுகின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணித்ததால், ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

3 Tankers Attacked In Strait Of Hormuz In 24 Hours Amid US-Iran Ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.