ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரானில் திரளும் பாகிஸ்தான் தலைவர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி உள்ளிட்டோர் ஈரானுக்குச் சென்றுள்ளது குறித்து...

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் | பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்... - கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 5:30 pm IST

ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்டோர் தெஹ்ரான் சென்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை தெஹ்ரானில் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் அரசின் தலைவர்கள் பெரும்பாலானோர் கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தெஹ்ரான் சென்றடைந்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோருக்கு ஈரானிய ராணுவம் மற்றும் அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பாகிஸ்தார் பிரதமர் ஷரீஃப், நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக், துணைப் பிரதமர் இஷாக் தார், சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷாஹ் உள்பட ஏராளமான பாகிஸ்தானிய தலைவர்கள் இன்று (ஜூலை 3) தெஹ்ரான் சென்றடைந்தனர்.

நாளை நடைபெறவுள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் அங்குத் திரண்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Summary

Pakistan's PM Shehbaz Sharif and Army Chief Asim Munir have traveled to Tehran to attend the funeral of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.