பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் பலியாகியுள்ளனர்.
பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி - ஸோப் நெடுஞ்சாலையில் 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று குவேட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி இன்று (ஜூலை 3) காலை சென்றுக்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தனாசார் பகுதியின் அருகில் வந்தபோது திடீரென அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த 40 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.
இந்த நிலையில், தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் படுகாயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான 40 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கைபர் மாகாணத்தின் சயீதாபாத் பகுதியில் கடந்த மே மாதம் நின்றுக்கொண்டிருந்த வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதியதில் 16 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Summary
Forty passengers have died after a bus plunged into a ravine in Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோர பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 31 பயணிகள் உயிா்தப்பினா்

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்
நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





