ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வளைகுடா போர்! சௌதி செல்லும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் சௌதி அரேபியா செல்வது குறித்து..

Saudi Arabia

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - (கோப்புப் படம்)

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:59 pm IST

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் சௌதி அரேபியாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் தலைமையில் துணைப் பிரதமர் இஷாக் தார், ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்டோர் ஆக. 6 முதல் ஆக. 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் செல்கின்றனர்.

வளைகுடா பகுதியில் போர் நடைபெற்று வரும் சூழலில், ராணுவ ஒப்பந்தமிட்ட சௌதி மற்றும் பாகிஸ்தானிய தலைவர்கள் சந்திக்கும் இந்தப் பயணத்தில் முக்கிய திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை சந்திக்கும் பாகிஸ்தானிய தலைவர்கள் இருநாடுகள் இடையேயான எதிர்கால உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், செங்கடல் பகுதியில் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையைக் கட்டுப்படுத்தி வரும் யேமனின் ஹௌதிகள் அவ்வழியாகச் செல்ல சௌதி அரேபியாவின் கப்பல்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

இத்துடன், தடையை மீறி பாப் அல்-மண்டாப் வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் கப்பல்கள் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், பாப் அல்-மண்டாப் மற்றும் செங்கடல் வழியாகப் பயணிக்கும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய கடல்வழி பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்குவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் கடல்வழி பாதுகாப்பு முயற்சிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan's PM Shehbaz Sharif and Army Chief Asim Munir are visiting Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.