இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் இன்று(பிப். 27) வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இனி வரும் நாள்களில் இஸ்ரேலுக்கான விமான சேவையும் முடக்கப்படலாம் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Summary
US advises embassy staff in Israel to leave now if they want, as risk of war hangs over Middle East
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?
ஈரானைவிட்டு இந்தியா்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

