ஹோர்முஸ் நீரிணையின் பாதையில் ஈரான் படைகள் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்தப் பாதையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கின. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது.
இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. மேலும், அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகள் பொருத்தின.
இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், எரிபொருள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் விநியோகம் சற்று இயல்புநிலைக்குத் திரும்புகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகி, சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுபற்றி ஈரான் அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports have emerged stating that mines planted by Iranian forces along the route of the Strait of Hormuz could not be detected.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



